இங்கிலாந்து வேகப்பந்து பந்துவீச்சாளர் மார்க் வுட் வீசிய பந்து இலங்கை துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் வலது கையின் கட்டை விரலில் பட்டு காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து மைதானத்தை விட்டு வெளியேறிய தினேஷ் சந்திமால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தினேஷ் சந்திமால் ஸ்கேன் எடுப்பதற்காகவே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட போதே தினேஷ் சந்திமாலுக்கு இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்துக்கு முகம் கொடுக்கும் போது தினேஷ் சந்திமால் 10 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 236 ஓட்டங்களைப் பெற்றதுடன், பதிலுக்கு துடுப்பெடுத்தாடய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸிற்காக 358 ஓட்டங்களைப் பெற்றது.