ஜப்பான் அரசினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 31 ஜீப் வண்டிகள், 4 பேருந்துகள் மற்றும் 10 சிற்றுார்திகள் என்பனவற்றை காவல் திணைக்களத்தின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கான ஜப்பான் துாதுவர் அகிர சுகியாமாவினால் இவ்வாகனங்கள் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜப்பான் அரசினால் முழு நன்கொடையாக 1,250 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.
அதன் முதற்கட்டமாக 775 மில்லியன் ரூபா பெறுமதியான 45 வாகனங்கள் இவ்வாறு காவல் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை இலகுபடுத்தும் நோக்கில் ஜப்பான் அரசு இவற்றை அன்பளிப்பு செய்துள்ளது.