இளம் யுவதி ஒருவரை பேஸ்புக் ஊடாக ஏமாற்றிய நபர் ஒருவர் அவரை அழைத்துச் செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையினால் 20 வயதுடைய யுவதி ஒருவரை பேஸ்புக் ஊடாக ஏமாற்றி அழைத்து செல்ல முற்பட்டுள்ளார்
அரநாயக்க பிரதேசத்தில் காதலர் தினத்தன்று இந்த சம்பவம் பதிவாகியுள்ளது குறித்த 20 வயதுடைய யுவதி கந்தளாய், அங்போபுர சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதுஅவரது காதலனாக போலி தகவல் வெளியிட்ட 52 வயதுடைய நபர் தனக்கு 20 வயதென காட்டிக்கொள்வதற்காக போலி புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளார்
குறித்த நபரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இரண்டும் மண் சரிவு ஒன்றில் உயிரிழந்துள்ளனர் அதற்கமைய கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக் ஊடாக காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுகடந்த 11ஆம் திகதி இரவு அங்போபுர பேருந்து நிலையத்திற்கு வருவமாறு 52 வயதுடைய காதலன் அழைத்துள்ளார் குறித்த நபர் ஹெல்மட் மற்றும் முகக் கவசம் அணிந்த நிலையில் யுவதியை பார்ப்பதற்கு சென்றுள்ளார் வீட்டிற்கு தெரியாமல் காதலனுடன் செல்ல வந்த யுவதி, அங்கு உண்மை உருவத்தை பார்த்த போது தான் ஏமாற்றப்பட்டமை தெரியவந்துள்ளது
உடனடியாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு முறைப்பாடு செய்த யுவதி தான் பேஸ்புகில் பார்த்து காதலித்த நபர் இவர் இல்லை எனவும், இவர் தனது தந்தையை விடவும் அதிக வயதுடையவர் எனவும், தன்னை ஏமாற்றி அழைத்து செல்ல முயற்சிப்பதாகவும் முறைப்பாடு செய்துள்ளார்
அதற்கமைய காதலர் தினத்தன்று குறித்த நபரின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் அவரை கைது செய்துள்ளதுடன் பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்பொலிஸ் நிலையத்திற்கு பெற்றோர் அழைக்கப்பட்டு, இளம் பெண் ஒப்படைக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்