நேற்று (13) இரவு தெமட்டகொடவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இராணுவத்தினர் இருவர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேஸ்லைன் மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் உரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ வீரர்கள் கைது
இரண்டு இராணுவ சிப்பாய்களும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது, குறித்த பெண்ணை காயப்படுத்தும் வகையில் இராணுவ சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.