புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட 4 பேர் அம்பன்பொல நெலும்பத்வெவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பன்பொல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டது.
சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்கள், கைப்பேசிகள் 06 ம் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பன்பொல, பலல்ல, புத்தளம் மற்றும் நிகவரடிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று மஹவ நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.