கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இரவு நேர அதிவேக புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதனப்படையில் இன்று (23) இரவு 8.30 மணிக்கு இந்த புகையிரதம் கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படவுள்ளது.
மீண்டும் நாளை (24) மாலை 5.50 மணிக்கு பதுளையில் இருந்து புறப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.