பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், அவாமி லீக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷகிப் அல் ஹசன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 7ஆம் திகதி பங்களாதேஷ் அரசாங்கத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் ரூபால் இஸ்லாம் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் மீது இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் ஷகிப் அல் ஹசனின் பெயரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.