சந்தையில் காணப்படும் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவிற்கான தட்டுப்பாடானது இந்த மாத இறுதி வரை தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை காரணமாக பால்மாவின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இம்மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாத ஆரம்பத்திலோ பால்மா சரக்குக் கப்பல் நாட்டை வந்தடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை கடந்த மாதம் 31ஆம் திகதி முதல் மீண்டும் உயர்த்த பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ பால்மாவின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவினாலும் உயர்த்த தீர்மானிக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் புதிய விலை ரூ. 1,345 ஆகவும், 400 கிராம் பால்மாவின் புதிய விலை ரூ. 540.