இந்தியா மருத்துவமனை ஒன்றில் பாதணிகளைக் கழற்ற கூறிய மருத்துவரை தாக்கியமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தின் பவ்நகர் – சிஹோர் பகுதியில் தனியார் வைத்தியசாலை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் பெண் ஒருவர் தலையில் ஏற்பட்ட காயத்திற்காகச் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவிற்குள் பெண்ணின் உறவினர்கள் சிலர் பாதணிகளை அணிந்தபடி உள்ளே சென்றுள்ளனர். அப்போது அறைக்குள் வந்த மருத்துவர், அவர்களிடம் பாதணிகளை வெளியே கழற்றி விட்டு, உள்ளே வரவும் எனக் கூறினார்.
இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், பெண்ணின் உறவினர்கள் மருத்துவரை கீழே தள்ளி, அடித்தும், மிதித்தும் உள்ளனர். இதனையடுத்து மருத்துரை தாக்கிய மூவரை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.