பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த ஆசிரியரை கைது சேந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் களுத்துறை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
1299 போதைப்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்கள் தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்துபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர், களுத்துறையில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வருவதுடன், மாவனெல்லையில் நிரந்தர வதிவிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபர் விசாரணைகளுக்காக களுத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.