தெரணியகல நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று பகல் பாடசாலையில் வைத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே 10 ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தியுள்ளதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கத்தியால் குத்திய மாணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், காயத்துக்கு உள்ளான மாணவன் தெரனியகல வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
கைதுசெய்யப்பட்ட மாணவன் இன்றைய தினம் அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை காதல் தொடர்பே இந்தச் சம்பவத்துக்கு காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.