எதிர்காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடசாலைகளை நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (19) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“நாம் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். அனைத்து பாடசாலைகளுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது இரு குழுக்களாக பிரித்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடசாலைகளை நடாத்துவது குறித்த கவனம் செலுத்தியுள்ளோம். ”
கேள்வி – தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் 60 வயதுக்கு உட்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்படுமா?
“தற்போது 14.5 மில்லியன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. கையிருப்பும் உள்ளது. 2.1 மில்லியன் கையிருப்பு உள்ளது. தடுப்பூசி தொடர்பில் எவ்வித பற்றாக்குறையும் இல்லை. பின்னர் 30 வயது முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் “