பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று (10) பிற்பகல் பள்ளத்தில் கவிழ்ந்ததில் விபத்துக்கு உள்ளாகி உள்ளது. <br>
இரத்தினபுரி – சிறிபாகம வீதியில் இந்துருவ – மஹவங்குவாவிற்கு அருகில் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பேருந்து கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. <br>
பேருந்தில் பயணித்த 28 பேர் காயமடைந்து கிலிமலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். <br>
அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமானதால் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.