பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17ஆவது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் இந்த பரா ஒலிம்பிக் போட்டியில், 167 நாடுகளைச் சேர்ந்த 4,400 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
பரா ஒலிம்பிக் வரலாற்றிலே அதிகபட்சமாக 84 வீர, வீராங்கனைகளை இந்தியா இம்முறை அனுப்பி உள்ளது சிறப்பான விடயம்.
இவ்வாறானவொரு நிலையில், இந்திய வில் வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி ஒரு புள்ளியில் உலக சாதனையைத் தவறவிட்டுள்ளார்.
தகுதிச் சுற்றில் அபாரமாக விளையாடிய ஷீத்தல் 703 புள்ளிகளைப் பெற்றார்.
இருப்பினும், 704 புள்ளிகளைப் பெற்ற துருக்கி வீராங்கனை உலக சாதனை படைத்தார்.
ஒரு புள்ளியில் உலக சாதனையைத் தவறவிட்ட போதிலும், வில் வித்தையில் 700 புள்ளிகளைக் கடந்த முதல் இந்திய பரா ஒலிம்பிக் வீராங்கனை என்ற பெருமையை ஷீத்தல் பெற்றுள்ளார்.
இதேவேளை இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம் பெற்றுள்ளது.