பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கக் கோரி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் இக்கையெழுத்து சேகரிக்கும் வேலைத்திட்டம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
பயங்கரவாத தடுப்ப சட்டத்தை நீக்கக்கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்து சேகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்