கிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைக் காலங்களையொட்டி உணவகங்களை ஆய்வு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது, உணவு உற்பத்தி மற்றும் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார் .
அத்துடன் , காலாவதியான மற்றும் தரம் குறைந்த உணவுகளை விற்பனை செய்வதாக பல உணவகங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, பண்டிகை காலங்களில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது