1 தினந்தோறும் உங்களின் குல தெய்வத்தை காலையில் பிரார்த்தனை செய்து வர வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
2 வியாழக்கிழமை மாலை 4 முதல் 5 மணி வரை உள்ள நேரம் குபேர காலமாகும். அதனால் இந்நேரத்தில் இல்லத்தில் குபேரனை வழிபட்டு வர பண வரவு அதிகரிக்கும்.
3 தாமரை திரி போட்டுக் குபேரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பண வரவு அதிகரிக்கும்.
4 அமாவாசையில் நம் முன்னோர்கள் இறந்த திதியில் தானம் செய்திட தனலாபம் உண்டாகும்.
5 வீட்டில் திருப்பதி வெங்கடாஜலபதியுடன் பத்மாவதி தாயார் உள்ள படத்தை வைத்து வழிபட்டு வந்தால் பண வரவு அதிகமாகும்.
6 சுத்தமான நீரில் வாசனைத் திரவியம் கலந்து இருவேளைகளிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி வீடு முழுவதும் தெளித்திட செல்வம் சேரும்.
7 கனகதாரா தோத்திரம் ஸ்ரீசுக்தம் படிப்பதன் மூலமும், அவரவர் நட்சத்திர மூலிகையை பணப்பெட்டியில் வைப்பதன் மூலமும் பண வரவுக் கூடும்.
8 ஓடும் வெள்ளைக்குதிரை, ஜோடி கழுதைப் படம் ஆகியவற்றை அடிக்கடி பார்த்து வர பண வரவு அதிகமாகும்.
10 வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்த்தால் பணத்தட்டுப்பாடு நீங்கும். ஆந்தையை வழிபட்டால் பண வரவு உண்டாகும் மற்றும் ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வந்தால் செல்வ வளம் அதிகரிக்கும்.
11 ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்து வந்தால் செல்வங்கள் பெருகும்.
12 தினசரி காலை எழுந்ததும் மற்றும் இரவு படுக்கும் முன்னர் சிறிது நேரம் புல்லாங்குழல் இசையை கேட்டு வர, தோல்விகள் அனைத்தையும் தூசியாய் பறக்கவிடலாம்