விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில், தாய், தந்தை என இருவரையும் இழந்து நிற்கும், 7-ம் வகுப்பு மாணவிக்கு அரசு உதவி புரிய கோரிக்கை எழுந்துள்ளது.
சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த கணவன் – மனைவியான பாக்கியராஜ் – செல்வியும் அச்சங்குளத்தில் நேற்று நடந்த பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
அவர்களது 12 வயது மகள் நந்தினி, சாத்தூர் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், தாய், தந்தையை இழந்து உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாணவிக்கு 11 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.