இந்தியாவுக்கும் பங்களாதேஸ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் விராட் கோஹ்லி கூறிய சிங்கள வார்த்தை அதிகமாக சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது
பங்களாதேஸ் வீரர் சகிப் அல் ஹசனை பார்த்து, கோஹ்லி “நியமாய் மல்லி” ( சிறப்பு, தம்பி) என்ற வார்த்தையை கூறியுள்ளார்.
எனினும், இதன் அர்த்தம் சகிப் அல் ஹசனுக்கு புரியவில்லை.
இதன்போது நீங்கள், மலிங்கவை போன்று யோக்கர்களை பயன்படுத்துகிறீர்கள் என்று கோஹ்லி ஹிந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சகிப், கோஹ்லியின் ‘நியமாய் மல்லி’ என்ற வார்த்தைகளுக்கான அர்த்தம் புரிந்ததாக புன்னகை செய்துள்ளார்.