நுவரெலியா பதுளை வீதியில் ஹக்கல பகுதியில் இன்று (19) அதிகாலை எரிபொருள் தாங்கி ஊர்தியொன்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதன் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளனர்.
கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து கெப்பட்டிபொல எரிபொருள் நிலையத்திற்கு டீசல் ஏற்றிச் சென்ற தாங்கி ஊர்தியொன்றே ஹக்கல பூங்காவை அண்மித்த பகுதியில் சுமார் 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சீரற்ற வானிலையால் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த தாங்கி ஊர்தியில் சுமார் 13,200 லீற்றர் டீசல் இருந்ததாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் குறித்த தாங்கி ஊர்தி கடுமையாக சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.