நாட்டில் நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்காக உதவி வழங்கும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில், ஒரு குடும்பத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 500 லீற்றர் நீரை பழைய விலைக்கே வழங்குவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, மாதம் ஒன்றுக்கு 15,000 லீற்றருக்கும் அதிகமான (30 நாட்களுக்கு) நீர் பயன்படுத்தினால் நீர் கட்டணம் பல பிரிவுகளின் கீழ் அதிகரிக்கப்படும்.
இருப்பினும், ஒரு குடும்பம் 15,000 லீற்றர் நீருக்கும் (15 Units) அதிகமாக பயன்படுத்தினால், பல பிரிவுகளின் கீழ் கட்டணம் உயர்த்தப்படும்.
ஆனால், தற்போது ஒவ்வொரு குடிநீர் கட்டணமும் 50 ரூபாய் என்ற நிலையான கட்டணம் பொதுவாக ஆறு மடங்கு அதிகரிக்கப்படுகிறது.
அதற்கமைய, ஒவ்வொரு நீர் கட்டணத்திலிருந்தும் 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.