இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்த நிலையில், அதனை அமைச்சரவைப் பேச்சாளரான இலங்கையின் வெகுஜன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெறும நிராகரித்துள்ளார்.
இலங்கையில் நிலவிவரும் அத்தியாவசிய பொருட்களுக்கான நெருக்கடி எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் தீர்க்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக வெளியாகின்ற தகவல்களை அண்மையில் சர்வதேச செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியின் போது இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் நிராகரித்திருந்தார்.