நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம் பேசுவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
ஆளும் கட்சியில் அங்கம் வகித்து தற்பொழுது சுயாதீனமாக இயங்கி வரும் 11 அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுடன் பொதுஜன முன்னணி பேரம் பேசி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
தாமும் கட்சியின் சில உறுப்பினர்களும் இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்காக பேரம் பேசி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவன்ச அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.