பாணத்துறையில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கொரகான பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 24 வயதான நிஷான் லக்ஷான் ஜயரத்ன என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் தனது நண்பியின் திருமாண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். இதன்போது ஏனைய நண்பர்களுடன் நடனமாடிக் கொண்டிருக்கையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக பாணத்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார், எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மரண விசாரணைகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.