தொழிலுக்கான ஓய்வூதிய வயதை நீடித்தால் அத்தகைய முடிவுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என சுகாதார நிபுணர்களுக்கான கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
அனைத்து பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக குறைக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக சுகாதார நிபுணர்களுக்கான கூட்டமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுகாதாரத் துறையில் குறிப்பிட்ட ஒரு தொழிலுக்கான இந்த முடிவை மாற்றியமைக்க அமைச்சரவை துணைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளதாக அது குறிப்பிடுகிறது.
அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அதன் பங்களிப்பை முற்றிலுமாக புறக்கணிக்கும் முயற்சிகளை சுகாதார நிபுணர்களுக்கான கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.
சுகாதார நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் இருபது தொழிற்சங்கங்கள் ஓய்வூதிய வயதுக் கொள்கையை மாற்றியமைக்கக் கூடாது என கோரி கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன.