நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பெண்ணொருவர் துப்பாக்கி சூட்டுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈட்டிமுறிஞ்சான் பகுதியில் பெண்ணொருவர் துப்பாக்கி சூட்டுக்குள்ளாகியுள்ளார்.
32 வயதுடைய பெண் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரது வீட்டிற்கு அருகில் வைத்து நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சூட்டு காயங்களிற்குள்ளான குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் பாலசுப்ரமணியம் சத்தியகலா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.