தம்புள்ளை பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது ஒரு வயது மகன் மற்றும் மூன்று வயது மகளுக்கு விஷம் கொடுத்து தானும் பருகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த விஷத்தை உட்கொண்ட தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் நேற்று (15) தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பிள்ளைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தம்புள்ளை-யாபாகம பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்த அந்த பெண்ணின் கணவர் தம்புள்ளை பொருளாதார மையத்தில் வாடகை வாகன ஓட்டுநராக இருந்துள்ளார் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.