தம்புள்ளை – வேமடில்ல குளத்தில் உந்துருளி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், குறித்த உந்துருளி வீதியை விட்டு விலகி குளத்தில் வீழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற இவ்விபத்தில், உந்துருளியில் 2 மாணவர்கள் உள்ளடங்கலாக நால்வர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த 16 வயதுடைய மாணவர்கள் இருவரும் கலேவெல, புவக்பிட்டிய, நபடகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், விபத்தில் படுகாயமடைந்த 18 மற்றும் 16 வயதுடைய ஏனைய இரு மாணவர்களும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.