மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படுவோரால், தாக்குதல் நடாத்தி கொள்ளையிடப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புஷ்பவனத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (24-01-2022) அதிகாலை வேதாரண்யம் அருகே கோடிக்கரைக்கு கிழக்கே இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த கொள்ளை சம்பத்தின்போது, மீனவர்களை தாக்கி 200 கிலோ வலை, ஒரு ஜி.பி.எஸ்.கருவி உள்ளிட்ட பொருட்களும், இந்திய நாணயத்தில் ஒரு லட்சம் ரூபா மதிப்பிலான பொருட்களே கொள்ளையிட்டு சென்றதாக தமிழக மீனவர்கள், இராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளனர்.
மேலும், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.