இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க குறித்து ஆராய, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 3 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது, இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் பல்வேறு தனியார் தரப்பினருடன் இணைந்து, சில வீரர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அந்த ஊடக அறிக்கைகளின் உண்மை மற்றும் பொய்மை குறித்தும் அந்த விசேட மூவர் கொண்ட குழுவின் ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.