தம்புள்ளை, யாபாகம பகுதியில் தாயொருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் நஞ்சூட்டி, தானும் நஞ்சருத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறின் காரணமாகவே, குறித்த தாய் தனது ஒன்று மற்றும் மூன்று வயதுடைய இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துள்ளார்.இந்நிலையில், தாயும் இரண்டு குழந்தைகளும் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதான வீதியோரத்தில் இவர்கள் கீழே விழுந்த நிலையில் காணப்பட்ட போது பிரதேசவாசிகள் கண்டு, குறித்த மூவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.எவ்வாறாயினும், இரு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.