டி-20 உலகக் கிண்ண தொடருக்கான குவாலிபயர் போட்டியில், அயர்லாந்து அணியை வீழ்த்தி இலங்கை சூப்பர் 12-க்கு தகுதி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 23-ஆம் திகதி முதல் உலகக் கிண்ண டி20 தொடருக்கான சூப்பர் 12- போட்டிகள் துவங்கவுள்ளது.
ஏற்கனவே சூப்பர் 12- க்குள் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவு, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் தகுதி பெற்றுவிட்டதால், இதில் தகுதி பெறுவதற்கான குவாலிபயர் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இன்றிரவு அபுதாபியில் நடைபெற்ற எட்டாவது போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியை வீழ்த்தி சூப்பர் 12-க்கு தகுதி பெற்றுள்ளது.
இன்று இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்பின் துடுப்பாட களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து வெளியேற, துவக்க வீரர் பதும் நிஷன்காவும், வஹின்டு ஹசரங்காவும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடியதன் மூலம் இலங்கை அணி 20 ஓவரில் 171 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணி சார்பில் துவக்க வீரர் பதும் நிஷன்கா 61 ஓட்டங்களும், வஹின்டு ஹசரங்கா 71 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது தேல்வியடைந்தது.
பந்துவீச்சையில் இலங்கை அணி சார்பில் மகீஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளையும், லகிரு குமார மற்றும் சமிக்கா கருணாரத்தின தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.