ஒரு கோடி இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கை தம்பதியினர் நேற்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த இரு தம்பதியினறும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். அவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஓமானின் மஸ்கட்டில் இருந்து விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுக்கு இடையே நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.