செல்வத்தின் காரணி கிரகமான சுக்கிரன் சுமார் 26 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும். சுக்கிரனின் பெயர்ச்சி மனித வாழ்க்கையை மட்டுமல்ல, நாட்டையும் உலகத்தையும் பாதிக்கக்கூடும். சுக்கிரன் தற்போது உத்திரம் நட்சத்திரத்தில் இருந்து ஹஸ்த நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார்.
ஜோதிடத்தின் படி, இன்று அதிகாலை 05:20 மணிக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி அடைந்துள்ளது. அதேபோல் சுக்கிரன் 27 நட்சத்திரராசிகளில் 13 வது நட்சத்திரத்தில் (ஹஸ்தா நட்சத்திரம்) பெயர்ச்சி அடைந்துள்ளார். இதற்குப் பிறகு, செப்டம்பர் 13, 2024 அன்று, சுக்கிரன் மீண்டும் தனது நட்சத்திரதை மாற்றுகிறார், அதிகாலை 03 மணிக்கு, சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு நுழைவார்.
செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம், அன்பு ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கும் கிரகம் சுக்கிரன். அந்த வகையில் சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அப்படிப்பட்ட பலன்களை தரும் என்று பார்ப்போம்.
சிம்ம ராசி
ஹஸ்த நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அடைந்துள்ளது சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். பண பலன்கள் கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.
கன்னி ராசி
ஹஸ்தா நட்சத்திரத்தில் சுக்கிரன் நுழைந்துள்ளது கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிட முடியும். அன்னை லட்சுமியின் சிறப்பான ஆசீர்வாதம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ராசி மாற்றத்தால் வெற்றி கிடைக்கும். திருமணத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். வரும் நாட்களில் திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.