இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக அவரது தந்தை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
இலங்கை விமான நிறுவனத்தின் விமானக் கொள்வனவு தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டு விசாரணையின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ கடந்த 4ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்ஷவை சந்திப்பு
பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்க்ஷவை செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை (05) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி, சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்ஷவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

