பிரபல பட்டிமன்ற நடுவரும், முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) காலமான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
1936-ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழ்ப் பட்டிமன்றங்களை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்.
தனது பாமரத்தனமான நகைச்சுவை, எளிய தமிழ் மற்றும் அனுபவமிக்க நடுவர் திறமையால் பல தலைமுறை மக்களைக் கவர்ந்தவர் சாலமன் பாப்பையா .
தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் பேரிழப்பு
கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி, தமிழ்த் தொண்டாற்றிய இவர், பல தமிழ் நூல்களையும், உரைகளையும் எழுதியுள்ளார் இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
கலகலப்பாக பட்டிமன்றங்களை நடத்துவதில் புகழ்பெற்றவர் சாலமன் பாப்பையா. அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களோ, இனிய குழந்தைகளே என்றொலிக்கும் கணீர்க் குரலுக்கு சொந்தக்காரர். இதுவரை அவர் 12,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார் சாலமன் பாப்பையா அவர்கள்
அவரது மறைவுக்குப் பல்துறைச் சார்ந்த பிரபலங்களும், தமிழார்வலர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்

