மக்களின் இறையாண்மையினை நிலைநாட்டுதல் வாழ்க்கைச்செலவு தினம் தினம் அதிகரிப்பு, ஆனால் சம்பள முரண்பாட்டிற்கு நீண்டகாலமாகத் தீர்வில்லை என வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆகியவற்றின் எற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகம் முன்பாக இன்று இப் போராட்டம் இடம்பெற்றது.
இதில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்புகள் அடங்கிய கோரிக்கையான பதாதைகள் ஏந்தியும் கோசங்கள் ஈட்டும் தமது கவனயீர்பினை முன்னெடுத்தனர்.