சட்ட விரோதமாக சொத்துக்களை சேகரித்த நபர்களின் சொத்து குறித்து விசாரிப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் விசேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக (குற்றச்செயல்) சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல், கறுப்பு பணம் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் மூலம் சேகரிக்கப்பட்ட சொத்துக்கள் இந்த பிரிவு மூலம் விசாரிக்கப்படவுள்ளன.
நாட்டிற்குள் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து குற்றச்செயல்களையும் தடுப்பதற்கு அமைச்சர் சரத் வீரசேகரவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸார் பாரிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்திருப்பதை கவனத்தில் கொண்டு மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்களை திருத்தும் மற்றும் வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களை முற்றுகையிடுவதற்கு விசேட நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.