வீட்டை சுற்றி வளைத்ததை அறிந்தவுடன், ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு கஞ்சாவை அடுப்பில் போட்டு எரிப்பதற்கு முயற்சி செய்த பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து வாகொல்ல பிரதேசத்தில் உள்ள வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்தனர். அந்த வீட்டில் எவரும் இல்லை என்பது போல் வீட்டின் ஜன்னல் கதவுகள் மூடப்பட்டிருந்த போதும், வீட்டில் சிலர் மறைந்திருப்பதை பொலிஸார் அறிந்து கொண்டுள்ளனர்.
அதன் பின்னர் , சில பொலிஸார் வீட்டருகே மறைந்திருக்க, ஏனைய பொலிஸார் அங்கிருந்து செல்வதுபோல போக்குகாட்டி மோட்டார் சைக்கிள்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
பொலிஸார் அங்கிருந்து சென்ற பின்னர் தரகரொருவரை வீட்டுக்கு அனுப்பி கஞ்சா கேட்டபோது, வீட்டில் இருந்த பெண் கஞ்சா கொடுக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது மறைந்திருந்த பொலிஸாரை பார்த்து கஞ்சாவை அடுப்பில் போட்டுள்ளார். உடனடியாக செயல்பட்ட பொலிஸார் கஞ்சாவை எரிய விடாமல் கைப்பற்றி பெண்ணையும் கைது செய்துள்ளனர்.