சட்டவிரோதமான முறையில் லிட்ரோ எரிவாயுவை தாங்கிகளில் சேமித்து வைத்து விற்பனை செய்த இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
ராஜகிரிய – மிரிஹான பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு லிட்ரோ எரிவாயுவுடன் கூடிய 12 தாங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், குறித்த எரிவாயு தாங்கிகள் மேலதிக விசாரணைக்காக நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.