கிளிநொச்சி கல்மடுகுளம் ஆற்றுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களின் உழவு இயந்திரத்துடன் 12 பேரை கைது செய்து தருமபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவது தொடர்பாக விசுவமடு தொட்டியடி 6 ஆம் படைப்பிரிவின் இராணுவ முகாமுக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்திற்கு எந்தவித அனுமதி பாத்திரங்களும் இல்லாததுடன், மணல் அகழ்வுக்கு அனுமதிகள் வழங்கப்படாத இடத்தில், மணல் அகழ்வில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் உழவு இயந்திரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.