வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் கையொதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் 35 – 40 வயதுடையவர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்