அமெரிக்காவின் மர்க் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் கொவிட் தடுப்பு மாத்திரையை இலங்கையில் பயன்படுத்த இதுவரை இந்நாட்டு சுகாதார அதிகாரிகள் பரிந்துரைகளை வழங்கவில்லை என மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
பிரித்தானியாவினுள் பயன்படுத்துவதற்காக molnupiravir என்ற மாத்திரைக்கு உலகிலேயே முதல் முறையாக பிரிட்டன் நேற்றைய தினம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒக்டோபர் மாதம் 11 ஆம் ்திகதி இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நான் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தேன். இதனை இலங்கையினுள் பயன்படுத்த முடியுமா? முடியாதா? என பரிந்துரைகளை பெற்றுக் கொடுக்குமாறு தெரிவித்திருந்தேன். எனினும், இதுவரை அந்த விசேட நிபுணர் குழு இதுவரை பரிந்துரைகளை பெற்றுக் கொடுக்கவில்லை. எதிர்வரும் வாரமளவில் குறித்த பரிந்துரைகளை பெற்றுக் கொடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கிறேன். இது தொடர்பில் இன்று காலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கதைத்தேன். விரைவில் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு இதன்போது கூறினேன். என்றார்.