கொழும்பிலிருந்து சென்ற தனியார் அதிசொகுசு பயணிகள் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (11.08.2026) அதிகாலை 1.30 மணிக்கு தம்புள்ளை – மஹியங்கனை பிரதான வீதியின் பகமூண, தமனயாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 63 வயதுடைய தாயாரும், அவரது 43 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சாரதி கைது
மேலும், உயிரிழந்த நபரின் ஒன்றரை வயதுடைய குழந்தையும் பலத்த காயமடைந்து பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களுந்தேவ பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவொன்றுக்கு சென்று, மீண்டும் வீடு திரும்பிக் சென்றுகொண்டிருந்த போதே இவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த பேருந்து கொழும்பில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததுடன், அதற்கு முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் தமனயாய பகுதியில் திரும்ப முற்பட்ட வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி பகமூண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

