கொழுத்தும் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நாம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகளையும் அதிக நீர்ச்சத்துக்கள் கொண்ட உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கோடை காலத்தில் அடிக்கடி செரிமானப் பிரச்சினைகள் உண்டாகும். எனவே எளிதில் ஜீரணமாகும் உணவுகளையும் திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
கொழுத்தும் கோடையில் சில உணவுகள்!
தக்காளி
தக்காளியில் வைட்டமின் சி மற்றும் நீர்ச்சத்து மிக அதிக அளவில் இருக்கிறது. தக்காளியில் உள்ள லைகோபீன் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் அதிகமாக இருக்கின்றன.
இந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நாள்பட்ட நோய்களையும் எதிர்த்துப் போராடுகின்றன. அதனால் கோடை காலத்தில் தக்காளியை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
தர்பூசணி
தர்பூசணியில் வைட்டமின்கள், மினரல்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. எல்லாவற்றையும் விட தர்பூசணியில் 90 சதவீதத்துக்கும் மேல் நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது.
தர்பூசணியில் உள்ள லைகோபீன் சூரியனின் புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதோடு உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்கவும் உதவி செய்கிறது.
அதோடு வெள்ளரிக்காய், முலாம்பழம் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
எலுமிச்சை
கோடை காலத்தில் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள எலுமிச்சை சாறை விட வேறு சிறந்ததொரு பானம் இல்லை.
கோடை காலத்தில் நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமலும் உடலின் ஆற்றலை தக்க வைத்திருக்கவும் எலுமிச்சை சாறு உதவியாக இருக்கும்.
சுரைக்காய்
சுரைக்காய் நம்முடைய உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் கொண்டிருக்கிற ஒரு காயாகும். நிறைய வைட்டமின்களும் மினரல்களும் அடங்கியிருக்கும் இந்த சுரைக்காயில் அதிக அளவு நீர் உள்ளடக்கமும் இருப்பதால் செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.
அதோடு உடலின் மெட்டபாலிசத்தையும் மேம்படுத்தி உடல் எடையைக் குறைக்கவும் சுரைக்காய் உதவி செய்யும்.