குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன், அமெரிக்காவில் குழந்தையைப் பிரசவிப்பதற்காகச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் , ஒருவர் அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதன் பிரதான நோக்கம், அங்கு குழந்தையைப் பிரசவித்து அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுப்பதே என அமெரிக்கக் கொன்சியூலர் (Consular) அதிகாரிகள் கருதினால், விண்ணப்பதாரிகளின் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்.
விசா விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்
இவ்வாறான நோக்கங்களுக்காகச் சுற்றுலா விசாவைப் பயன்படுத்துவது அமெரிக்க சட்ட திட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்டதொன்றல்ல எனவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
. அத்துடன், இத்தகைய விசா விண்ணப்பங்களை அமெரிக்கக் கொன்சியூலர் அதிகாரிகள் நிராகரிப்பார்கள் எனவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

