சிலருக்கு குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும். அப்படி செய்வதால் உடலுக்கு நல்ல விளைவுகள் தான் ஏற்படும் என்று கூறப்படுகின்றது. இப்படி தான் மருத்துவர்களும், ஆய்வாளர்களும் கூறுகிறார்கள்.
ஒரு ஆரோக்கியமான மனிதனின் சிறுநீரில் நீர், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் யூரியா மட்டுமே காணப்படும். எனவே ஷவரில் குளிக்கும் போது சிறுநீரை நீங்கள் தனியாக சுத்தம் செய்யத் தேவையில்லை. அது கீழே விழும் தண்ணீரில் கலந்து எளிதாக அப்படியே வெளியேறி விடும்.
நம்முடைய சிறுநீர் சோரியாஸிஸ் மற்றும் சரும பிரச்சினைகளை களைய உதவுகிறது. ஏனெனில் நம்முடைய சிறுநீரில் இயற்கையாக காணப்படும் யூரியாவைத் தான் சரும க்ரீம்கள் மற்றும் மருந்துகளில் பயன்படுத்துகின்றனர். எனவே குளிக்கும் போது சிறுநீர் உங்க கால்களில் படுவதை குறித்து நீங்கள் வருத்தப்பட வேண்டாம். இது உங்க சருமத்திற்கு நல்லதே. சிறுநீர் ஒரு ஆன்டி செப்டிக் மருந்தாகும். குளிக்கும் போது கழிக்கும் சிறுநீர் உங்க பாதங்களில் படும் போது பூஞ்சை தொற்றை போக்குகிறது.
சுற்றுசூழல்படி பார்க்கும் போது, குளிக்கும்போதே சிறுநீர் கழிப்பதால் தண்ணீர் மிச்சமாகிறது. அதைக் கழுவ ஃபிளஷ் செய்ய கூடுதல் நீரும் தேவைப்படாது. உலக நாடுகளில் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துவார்கள் என அறியப்படுகிறது.