யாழ்ப்பாணம் தீவகம் குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மீனவர்கள் பயணித்த படகு, பாதணிகள் மற்றும் அவர்கள் ஏற்றிவந்த ஐஸ் கட்டிகள் உட்பட்ட பொருட்களுடன் படகு கரையொதுங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
படகில் பயணித்த 03 பிள்ளைகளின் தந்தையான ஞானசிங்கம் ரமேஸ் (வயது 41), ரஞ்சன் மயன் (வயது 19) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.
அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இயற்கையான ஆபத்தினை சந்தித்தார்களா? அல்லது அத்துமீறும் இந்திய மீனவர்களால் ஆபத்து விளைவிக்கப்பட்டுள்ளதா? என்று சந்தேகம் நிலவுவதாக நெடுந்தீவு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.