கிளிநொச்சி, இரத்தினபுரம் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் இருந்து வெடிபொருட்கள் சில இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து இரத்தினபுரம் செல்லும் வீதியில் உள்ள நீர் தாங்கிக்கு முன்புள்ள தனியார் வீட்டில் ஆள் நடமாட்டங்கள் இல்லாமையினால் அவ் வீட்டில் இனம் தெரியாத நபர்களினால் பழைய ஏகே 47 துப்பாக்கியின் ரவைகள் 30 ம் மற்றும் ஏகே 47 துப்பாக்கியின் மகஸின்கள் மூன்றும் உள்ளதாக வீட்டின் உரிமையாளர் இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.