கிளிநொச்சி – பரந்தன் சந்தியில் பஸ்ஸில் கைவரிசை காட்டிய மூன்று பெண்கள் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (30-12-2022) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து மல்லாவி நோக்கி தனியார் பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவரின் கைப்பையில் இருந்த 50,000 ரூபாய் பணம் மற்றும் வளைகாப்பு ஒன்றும் களவாடப்பட்டிருந்தது.
குறித்த பஸ் பரந்தன் சந்தியினை அண்மித்த போது சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டிருந்த பெண்கள் மூவரை நடத்துனர் விசாரித்த போது அவர்கள் தப்பியோட முயற்சித்துள்ளதுடன், பொதுமக்களினால் குறித்த மூன்று பெண்களும் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் பரந்தன் சந்தியில் நின்ற பொலிஸாரிடம், குறித்த மூன்று பெண்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.